விருதுநகர் மாவட்டத்தில் அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியாளர் மற்றும் உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த மையங்களில் அங்கன்வாடி மைய பணியாளர்கள் கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகின்றனர். அதனால், இம்மையங்களில் உள்ள 278 அங்கன்வடி மைய பணியாளர்கள், 3 குறு அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் 225 உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை இன சுழற்சி முறையில் உடனே நிரப்புதவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அங்கன்வாடி மைய பணியாளர்: இப்பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், பழங்குடியினர் 8-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 31.10.2014 அன்றைய நாளில் 25 வயது முதல் 35 வயதிற்குள்ளும், விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25 வயது முதல் 40 வயது வரையிலும், மலைப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 20 முதல் 40 வயது வரையிலும் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்கிறவர்கள் அப்பகுதி ஊராட்சியை சேர்ந்தவர்களாகவும் அல்லது துணைக்கிராமத்தை சேர்ந்தராகவும் இருக்க வேண்டும். தகுதியான நபர் கிடைக்காத நிலையில் 10 கி.மீ சுற்றளவு அல்லது அருகில் உள்ள ஊராட்சியைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்.

உதவியாளர் பணியிடம்: இப்பணிக்கு எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. மேலும், 31.10.2014 அன்றைய நாளில் 20 வயது முதல் 40 வயது வரையிலும், விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு 45 வயது வரையிலும் இருக்க வேண்டும். அந்தந்த பகுதி ஊராட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது துணைக் கிராமத்தைச் சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும்.

இப்பணியிடம் தொடர்பாக விருதுநகரில் செயல்பட்டு வரும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வருகிற 10-ம் தேதி முதல், தொடர்ந்து 24-ம் தேதி வரையில் வேலை நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அளித்து பயனடையலாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com