வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சேதுசமுத்திர திட்டம் தடைப்பட்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சி : ஜி.கே. வாசன்

ஆம்பூரில் உள்ள தன்னுடைய ஆதரவாளரின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது,  இலங்கை தமிழர் பிரச்சனையிலும், தமிழக மீனவர் பிரச்சனையிலும் இலங்கை

News image
Updated On :10 நவம்பர் 2014, 12:02 pm

சேதுசமுத்திர திட்டம் தடைபட்டிருப்பதற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சி தான் என ஆம்பூரில் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

ஆம்பூரில் உள்ள தன்னுடைய ஆதரவாளரின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது,  இலங்கை தமிழர் பிரச்சனையிலும், தமிழக மீனவர் பிரச்சனையிலும் இலங்கை அரசு ஈவு இரக்கமின்றி நடக்கின்றது   இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஈவு இரக்கமில்லாமல் மரண தண்டனை விதித்துள்ளது.  தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் போர் நடந்து முடிந்த பிறகு அங்குள்ள தமிழர்கள் அவர்களுடைய பகுதிகளில் மறு குடியமர்வு செய்வதற்காக அப்போதைய மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்தது.  ஆனால் அவர்கள் இன்னும் மறு குடியமர்த்தப்படவில்லை.  அவர்களை மறு குடியமர்த்த இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சேதுசமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம், முக்கிய திட்டமும் ஆகும்.  மத்தியில் ஆளும் பாஜக அரசு சேதுசமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

ஈவிகேஎஸ். இளங்கோவன், திமுக தலைவர் மு. கருணாநிதி ஆகியோர் சந்திப்பு குறிóத்தும்,  காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் குறித்தும் எதுவும் கூறுவதற்கு இல்லை.   தமிழகத்தில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  மின்சார கட்டண உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.   விலை உயர்வு கண்டத்திற்கு உரியது.  அதனை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.