பாளை மத்திய சிறையில் கைதிகள் உழைப்பில் தளக்கல் தயாரிப்பு: ஏடிஜிபி பார்வையிட்டார்
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் உழைப்பில் தளக்கல் தயாரிக்கும் பணியினை புதன்கிழமை தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி பார்வையிட்டார். இந்த ஆய்வின்


பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் உழைப்பில் தளக்கல் தயாரிக்கும் பணியினை புதன்கிழமை தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய ஏ.டி.ஜி.பி.ஷகில்அக்தர் உடன் இருந்தார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் ரூ. 12 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் எனும் தளக்கல் தயாரிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள கைதிகள் 15 பேர் இந்த தளக்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 1,700 தளக்கல் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தளக்கல் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்படும் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த தளக்கல் தரை தளம், கார் நிறுத்துமிடங்களில் பதிக்கப்படும். தமிழகத்தில் முதல் முறையாக இந்த தளக்கல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளின் உழைப்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஈரோகான் டைல்ஸ் உற்பத்தி செய்யும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதன்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வருகை தந்த தமிழக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி, தமிழக காவலர் வீட்டு வசதி வாரிய ஏ.டி.ஜி.பி. ஷகில்அக்தர் ஆகியோர் இப்பணியினை பார்வையிட்டனர். கைதிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும் தளக்கல் நேர்த்தியாக இருப்பதாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. திரிபாதி குறிப்பிட்டார்.
பின்னர் சிறையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள உணவுக் கூடத்தை பார்வையிட்ட திரிபாதி, வரவு செலவு கணக்கினை ஆய்வு செய்தார். பின்னர் கைதிகள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.
மத்திய சிறை கண்காணிப்பாளர் இரா. கனகராஜ், காவலர் வீட்டு வசதி வாரிய கட்டுமானப் பிரிவு தலைமை பொறியாளர் குமார், கண்காணிப்பு பொறியாளர் குமரேஸ்வரன், செயற்பொறியாளர் குமரகுரு, உதவி செயற்பொறியாளர் ஜெயசங்கர், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...