வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நீர்வரத்து அதிகரிப்பு : பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News image
Updated On :13 நவம்பர் 2014, 9:47 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நிகழ் பருவத்தில் வடகிழக்கு பருவ மழை  30 ஆம் தேதி வரை 180 மி.மீ அதிகமாக பெய்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டை விட அணைகளின் நீர்இருப்பு 33 சதவீதம் அதிகமாக இருப்பதாக கணக்கிடப்பட்டு்ள்ளது. பருவ மழை அதிகமாக பெய்ததால் தாமிரவருணி பாசனத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சங்கரன்கோவில் வட்டத்தில் மானாவாரி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாசனத்திற்கு தேவையான யூரியா உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க வேளாண்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 72 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 46 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 43 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 6 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 15 மி.மீ மழையும், பேச்சிப்பாறை அணையில் 5 மி.மீ மழையும், பெருஞ்சாணி அணையில் 30 மி.மீ மழையும், தென்காசியில் 3.6 மி.மீ மழையும், செங்கோட்டையில் 1.1 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,400 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனம், குடிநீர் தேவைக்காக 705 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 111.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.23 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80.10 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 75.35 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 81.75 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 67.59 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 108.25 அடியாகவும் இருந்தது.

மணிமுத்தாறு அணையில் 35 கனஅடியும், கடனாநதி அணையில் 110 கனஅடியும், ராமநதி அணையில் 40 கனஅடியும், கருப்பாநதி அணையில் 25 கனஅடியும், அடவிநயினார் அணையில் 100 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 22.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 13.75 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 34.75 அடியாகவும் இருந்தது.

சாகுபடி பணிகள் தீவிரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையின் மூலம் பாசனம் பெறும் 7 கால்வாய்கள், கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் பகுதியில் பிசான பருவ சாகுபடி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு்ள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.