சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On :13 நவம்பர் 2014, 7:44 am

கடலூரைச் சேர்ந்த சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அடுத்த வண்டிக்குப்பம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் கங்காதுரை(28). இவர் பல்வேறு சாராய வழக்குகளில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் மீண்டும், புதுச்சேரியில் இருந்து 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்தபோது கடலூர் மதுவிலக்கு போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.

கங்காதுரையை பலமுறை கைது செய்தும், திருந்தாமல் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் பொருட்டு, எஸ்பி ஆ.ராதிகா பரிந்துரையை ஏற்று ஆட்சியர் சுரேஷ்குமார், சாராய வியாபாரி கங்காதுரையை ஓராண்டு தடுப்புக்காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலூர் மத்திய சிறையில் உள்ள கங்காதுரையிடம் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் புதன்கிழமை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.