நாமக்கல் பகுதிகளில் கோழிப்பண்ணைகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள சில கோழிப்பண்ணைகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமைகளாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து ஆட்சியர் தட்சணாமூர்த்தி உத்தரவின் பேரில், ஆர்டிஓ காளிமுத்து தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ஆய்வு நடத்தினர். மூன்று கோழிப்பண்ணைகளில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 27 பேர் (கொத்தடிமைகளாக உள்ளதாக கருதப்படுபவர்கள்) மீட்கப்பட்டனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது விசாரணையின் போது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.