வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் வேட்டையாட முயற்சி: 5 பேர் கைது

நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற இளைஞர்கள் உள்பட 5 பேரை போலீஸார்
Updated on
1 min read

நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற இளைஞர்கள் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

 திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கவராயப்பட்டி பாசிகுளம் பகுதியில் சார்ப்பு ஆய்வாளர் கே.மருதமுத்து தலைமையிலான போலீஸார் ரோந்து பணிக்கு சென்ள்ளனர், அப்போது, அந்த பகுதியில் புதர் மறைவில் பதுங்கியிருந்த சிலர் தப்பியோட முயன்றுள்ளனர். சுற்றி வளைத்த போலீஸார், அவர்களிடமிருந்து ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 போலீஸார் பிடியில் சிக்கியவர்கள் விவரம்: கவரயாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெ.கருப்பையா(50), ம.ஞானபிரகாசம்(42), கா.முத்துநாயக்கர்(22), ஜெகன் அந்தோணி(23) மற்றும் தவசிமடை பகுதியைச் சேர்ந்த ஜோசப் ராஜ்(24). இவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமலை பகுதியில் வேட்டையாட செல்வதாக தெரிவித்துள்ளனர்.

 மேலும், நொச்சியோடைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ம.ஜஸ்டின்(எ) கட்டாரி என்பவர், நாட்டு துப்பாக்கியை கொடுத்துவிட்டு, அவர் வரும் வரை பதுங்கியிருக்க சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸார், சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

 தப்பியோடிய துப்பாக்கி உரிமையாளர் ம.ஜஸ்டின்(எ) கட்டாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com