விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை மிரட்டியதாக ஆசிரியர் மீது வழக்கு

விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை வழிமறித்து அமிலம் வீசிவிடுவதாக மிரட்டிய தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.....
Updated on
1 min read

விருதுநகர் அருகே பெண் ஆசிரியரை வழிமறித்து அமிலம் வீசிவிடுவதாக மிரட்டிய தனியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது சூலக்கரை காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் மலைக்கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஆனந்தி(28). இப்பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாராம். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன்(28). விருதுநகர் தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் புதுப்பேருந்து நிலையம் ரயில்வே கேட் பகுதி அருகே ஆனந்தி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, அந்த வழியாக வந்த பாண்டியராஜன், தன்னுடன் பேச வலியுறுத்தியும், இல்லையென்றால் அமிலம் வீசி விடுவதாகவும் மிரட்டினாராம். இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஆனந்தி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து  நடந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com