விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலக அலுவலக வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர் க.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர்(பொறுப்பு) சே.ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
உள்ளாட்சி தணிக்கை துறை உதவி இயக்குநர் கருப்பையா சிறப்புரை வழங்கினார். இதில், வாழ்க்கையை வசப்படுத்தும் வாசிப்பு என்கிற தலைப்பில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் சு.ராஜேந்திரனும். மேலோட்ட வாசிப்பு தலைப்பில் கல்லூரி பேராசிரியர் எஸ்.வினோத் ஆகியோர் விளக்கமாக பேசினார்கள்.
இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட மைய நூலகத்தின் வாசகர்கள், நூலகர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் இறுதியாக திருத்தங்கல் நல் நூலகர் விருது பெற்ற ராம்சங்கர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.