விருதுநகரில்  நடந்து சென்ற பெண்ணிடம்  6 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவீரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே செவல்பட்டியைச் சேர்ந்த முத்தையன் மனைவி சுனிதா(37). இவர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு உறவினரை பார்ப்பதற்காக திங்கள்கிழமை மாலையில் சென்றாராம். அதையடுத்து, அங்கிருந்து பேருந்து ஏறுவதற்காக சௌந்தரபாண்டியனார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அப்போது  பின்புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சுனிதாவின் கழுத்தில் கிடந்த 6 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினர்களாம்.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சுனிதா புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com