நகைக்கடை உரிமையாளர்களிடம் 2 கிலோ தங்க நகைகள் கொள்ளை

நகைக்கடை ஊழியர்களிடம் 2.200 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Updated on
1 min read

திண்டுக்கல், யானைகுப்பம் பகுதியில் நகைக்கடை ஊழியர்களிடம் 2.200 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (48), மதுரை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (40), இருவரும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் உள்ள நகைக் கடையில் கடந்த 8 வருடங்களாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும், வெளியூர்களில் உள்ள நகை கடைகள் கொடுக்கப்படும் ஆர்டரின் பெயரில் நகைகளைச் செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, திண்டுக்கல் நகரில் உள்ள தங்கநகை கடைகளுக்கு கொடுப்பதற்கு 2.200 கிலோ தங்க நகைகளை, மதுரை தனியார் பேருந்தில் எடுத்துக்கொண்டுச் சென்றனர். அப்போது, திண்டுக்கல் யானைகுப்பம் பகுதியில் இறங்கும் போது பேருந்தில் வந்த நான்கு பேர் கொண்டு கும்பல் நகைகள் இருந்த பையை பறித்துக்கொண்டு அந்த பகுதியில் தயாராக நின்றுக்கொண்டிருந்த மோட்டர் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, தமிழ்செல்வன், பிரபாகரன் ஆகியோர் திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தின்டுக்கல் சரக டிஐஜி என்.அறிவுச்செல்வம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் த.ஜெயசந்திரன் ஆகியோர் காவல் ஆய்வாளர் தலைமையில் நான்கு தனிப்படை அமைத்து தப்பிச் சென்றவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com