விருதுநகர் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் மானபங்கம்: காதலன் கைது

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் கல்பனாதேவி(20). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முருகன்(30). இவர் கேபிள் டிவி
Updated on
1 min read

விருதுநகர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை மானபங்கம் செய்துவிட்ட பின் மறுத்த காதலனை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மேலேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையாவின் மகள் கல்பனாதேவி(20). அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் முருகன்(30). இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை மானபங்கம் செய்ததாகவும்  கூறப்படுகிறது.

இந்நிலையில் முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்து வந்தார்களாம். இது குறித்து கல்பனா தேவிக்கு தெரிய வந்ததை தொடர்ந்து மனவேதனை அடைந்து, முருகனிடம் நேரில் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட நிலையில் மறுத்தாராம்.

இது தொடர்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரிடம் கல்பனாதேவி புகார் செய்தார். அதன் அடிப்படையில் முருகன் மீது போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com