விருதுநகர் அருகே 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில்
Updated on
1 min read

விருதுநகர் அருகே தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வந்ததாக 2 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி(32) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த காளிராஜ்(33). இவர்கள் 2 பேரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒடையில் தொடர்ந்து அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாம்.

இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் 2 பேர் மீதுள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீஸார் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com