விருதுநகர் அருகே கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி தீப்பெட்டி தொழிலாளியிடம் ரூ.70 ஆயிரம் மோசடி செய்த 2 இளைஞர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் நடராஜன்(30). இவர் இப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் திருமங்கலம் அருகே பொட்டல்பட்டியைச் சேர்ந்த இவரது மனைவிக்கு கூட்டுறவு நியாய விலைக்கடையில் எடையாளர் பணி வாங்கித் தருவதாக கூறி, சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(32), இருக்கன்குடியைச் சேர்ந்த பாண்டியராஜ்(31) ஆகியோர் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நடராஜை அணுகினார்களாம்.
அதோடு, இதற்கு குறிப்பிட்ட அளவு பணம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மையென நம்பிய நடராஜ் முதல் கட்டமாக ரூ.70 ஆயிரம் பணத்தை இருவரிடமும் அளித்தாராம். எனவே குறிப்பிட்ட நாள்களுக்குள் வேலை வாங்கித் தராமல் காலதாமதம் செய்து வந்தனாராம். மேலும், பணத்தை திருப்பிக் கேட்டதற்கு திருப்பித் தர மறுத்ததோடு இனிமேல் தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்களாம்.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் நடராஜன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சுப்பிரமணி, பாண்டியராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.