சேலத்தில் நவம்பர் 23 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மணி மண்டபத்தை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக, திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான வீரபாண்டி ராஜா வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகத்தின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் நவம்பர் 23 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
நவம்பர் 23 ஆம் தேதி காலை 8 மணியளவில், பூலாவரியில் உள்ள திமுக அலுவலக திடலில் இருந்து அவரது நினைவிடம் வரை மவுன ஊர்வலம் நடைபெறுகிறது. இதில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு மண்டபத்தைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் காலை 9 மணிக்கு, வி.எஸ்.ஏ. கல்லூரி மைதானத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த நிகழ்வுகளில் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.