இவர்களில் தந்தையுடன் செல்வம் என்ற மகன் தங்கி இருந்தார். தந்தை தனது சொத்தை 4 மகன்கள் உட்பட தனக்கும் சேர்த்து 5 பாகமாக பிரித்திருந்தார். இந்நிலையில் தனது பாகத்தை விற்க முறபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜங்கம் என்பவர் தந்தையிடம் வந்து சண்டையிட்டதோடும் தம்பி செல்வத்தை ஆத்திரத்தில் வெட்டியுள்ளார். வெட்டுபட்ட செல்வம் 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வீட்டில் இருந்த தந்தையையும் வெட்டினர். இதில் தந்தை சந்தோசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உடையார் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.