மதுரை அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை நாகமலை புதுக்கோட்டை ஒத்தவீடு பகுதிதைச் சேர்ந்தவர் வீராங்கன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி வீராங்கனும் அவருக்கு கடன் கொடுத்தவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த் மோதலில் வீராங்கன் தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.