மதுரையில் நகரில் 2 பைக்குகள் எதிரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை செல்லூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி (34) என்பவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தள்ளாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேறொரு மோட்டார் சைக்கிளில் வந்த விளாச்சேரியை சேர்ந்த ரவி என்பவர் மோதினார். இந்த விபத்தில் பாண்டிக்கு தலையிலும், ரவிக்கு காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தள்ளாகுளம் போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.