

விருதுநகர் அருகே சாலைப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பாவாலி கிராம ஊராட்சி. இக்கிராமத்தில் நடுத்தெருவில் சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதேபோல், இருபுறமும் கழிவு நீர் வாய்க்கால் வசதியில்லாத நிலையிருக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி கொசுக்கள் தொல்லையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பல்வேறு முறை கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் விருதுநகர்-அழகாபுரி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சம்பவம் அறிந்த ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் ஊராட்சித் தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில்,விரைவில் சாலை சீரமைக்கவும், கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அந்த சாலையில் காலை நேரம் என்பதால் போக்குவரத்து எதுவும் வராததால் பாதிப்பு எதுவும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.