விருதுநகர் அருகே கஞ்சா விற்றவரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
விருதுநகர் வடமலைக்குறிச்சி சாலைப்பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதியில் மேற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் போலீஸார் ஆகியோர் திங்கள்கிழமை இரவு திடீர் ரோந்து சென்றனர். அப்போது, 4 வழிச்சாலையிலிருந்து பிரியும் வடமலைக்குறிச்சி சாலை பாலத்திற்கு அடியில் செல்லும் போது ஒருவர் தப்பியோட முயற்சித்தாராம்.
உடனே சுதாரித்துக் கொண்ட போலீஸார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் விசாரணை செய்ததில் விருதுநகர் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மகன் மொட்டை என்ற முருகன்(40) என்பது தெரியவந்தது. ஏற்கனவே இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.