விருதுநகர் அருகே இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கை துண்டானது

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சேசம்மாள்(50). இவர் பாண்டியன் நகரில் உள்ள தனியார் நல்லெண்ணைய் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம்
Updated on
1 min read

விருதுநகர் அருகே தொழிற்சாலையில் வேலை செய்து கொணடிருந்த போது இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் இடது கை துண்டானது.

விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி சேசம்மாள்(50). இவர் பாண்டியன் நகரில் உள்ள தனியார் நல்லெண்ணைய் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் திங்கள்கிழமை மாலையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாராம். அப்போது, எதிர்பாரத விதமாக சேலை இயந்திரத்தில் சிக்கியது. அதை எடுப்பதற்காக முயற்சிக்கும் போது அவரது இடது கை இயந்திர பாகத்தில் சிக்கி துண்டானது.

உடனே அருகில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். தற்போது, இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com