சாத்தூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது முதுகலை பட்டதாரி ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோர் பாலியல் தொந்தரவு தொடர்பாக பொய்யான புகார் அளித்துள்ளதாக கூறி தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தினன் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக ஆசிரியர்களின் சார்பில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை தலைமையில் ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் முதுகலை ஆசிரியை மற்றும் பயிற்சி ஆசிரியைகள் ஆகியோருக்கு, இங்கு பணியாற்றி வரும் முதுகலை ஆசிரியர், தலைமையாசிரியர், மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஆகிய 3 பேர் பாலியல் தொந்தரவு செய்ததாக கல்வித்துறை அதிகாரியிடம் பொய்ப்புகார் அளித்துள்ளனர்.
எனவே எங்கள் மீது உள்நோக்கத்துடன் புகார் செய்துள்ளது தெரியவருகிறது. அதனால் பள்ளியில் பணியாற்றும் போது பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், பள்ளிக்கு காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் சார்பாக தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் அண்ணாத்துரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமாரிடம் நேரில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.