திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 9 ஆயிரம் ஆட்டோக்கள் வியாழக்கிழமை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளிகளுக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் மாணவர்களும், பெற்றோரும் அவதிக்கு ஆளாகினர்.
கட்டுப்படியாகக் கூடிய நியாயமான கட்டணத்தினை மாவட்ட நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும். மீட்டர் பொருத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். விலையில்லா கட்டண நிர்மானி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருநெல்வேலி மாவட்ட அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள்கூட்டமைக்கு அறிவித்திருந்தது.
அதன்படி வியாழக்கிழமை இம் மாவட்டத்தில் 9 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகினர். ரயில், பேருந்து நிலையங்களில் வந்திறங்கிய பயணிகள் ஆட்டோ கிடைக்காததால் அதிக கட்டணம் கொடுத்து கார்களைப் பிடித்து வீடுகளுக்குச் செல்லும் கட்டாய நிலை ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கையை பரிசீலித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.