முன்னாள் முதல்வர் காமராஜரின் தங்கை மகன் காலமானார்

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை மீதுள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கே.மோகன்(73). இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளின் மகனாவார்.
Updated on
1 min read

விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை மீதுள்ள வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கே.மோகன்(73). இவர் முன்னாள் முதல்வர் காமராஜரின் ஒரே தங்கையான நாகம்மாளின் மகனாவார்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உடல்நலக்குறைவால் விருதுநகர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார். மேலும், இவர்  அரிசி மொத்த வியாபாரம் தொழில் செய்து வந்தார்.

இவருக்கு இந்திரா என்ற மனைவியும், உயிரிழந்த மகன் சிவகுமார் மற்றும் மகள் சுஜாதா உள்ளனர். இவரது நல்லடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை மாலையில் புதுப்பேருந்து நிலையம் எதிரே உள்ள மயானத்தில் நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு 04562-280332-ஐ தொடர்பு கொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com