விருதுநகர் அருகே கருந்திரிகளில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து: தாய், மகன் படுகாயம்

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றும் தயாரிப்பில் ஈடுபட்டார்களாம்.
Updated on
1 min read

விருதுநகர் அருகே அனுமதியின்றி கருந்திரிகளை தயாரித்து வைத்த போது ஏற்பட்ட உராய்வினால் ஏற்பட்ட தீ விபத்தில் தாய், மகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகரை அடுத்த ஆர்.ஆர்.நகர் அருகே டி.சேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி(40). இவரது வீட்டில் மனைவி உள்ளிட்டோர் கருந்திரிகளுக்கு வெள்ளைத்தாள் சுற்றும் தயாரிப்பில் ஈடுபட்டார்களாம். பின்னர் அதை தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக தயாரித்த கருந்திரி கட்டுக்களை வீட்டின் ஓரப்பகுதியில் வைத்துள்ளனர். அப்போது, கருந்திரி கட்டுக்களில் உராய்வு ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதாம்.

இந்த விபத்தில் வீட்டிற்குள் இருந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாக்கியலட்சுமி(35), இவர்களது மகன் யோகிராம்(8) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com