விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 8 சவரன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே ஆர்.எஸ் நகரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் சீனிவாசன்(36). இவர் கணிப்பொறி உதிரி பாகங்கள் விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாராம். பின்னர் அங்கிருந்து புதன்கிழமை காலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 8 சவரன் நகை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. உடனே இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.