அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகிரியில் அதிமுகவினர் வியாழக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிற்பகல் வரை கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இப் போராட்டத்துக்கு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் யு.எஸ்.ஏ. வெங்கடேசன் தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் பேரவைத் தொகுதிச் செயலர் கே. துரைப்பாண்டியன், ஒன்றியச் செயலர் ஆர்.ஆர். மூர்த்திபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் எஸ். கார்த்திகைச்செல்வன், மாவட்ட எம்ஜிஆர் மன்றத் இணைச் செயலர் வீ.கே. ஆயில்ராஜாபாண்டியன், துணைச் செயலர்கள் என். ராமச்சந்திரன், எஸ். சின்னத்துரை, ஆர். குருசாமிபாண்டியன், எம்.பி. ராஜேந்திரன், அதிமுக நகரச் செயலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
உண்ணாவிரதத்தை முடித்துவைத்து, எஸ். துரையப்பா எம்எல்ஏ பேசுகையில், அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கெதிராக நடைபெற்ற மிகப்பெரிய சதியின் காரணமாக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் அவர் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர். அதிமுக எனும் பேரியக்கத்தை யாராலும் வீழ்த்தமுடியாது. இயக்கத்தை வழிநடத்துவதற்கு இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகள் தயாராக இருக்கின்றன. சிறையைக் கண்டு அஞ்சாதவர், ஜெயலலிதா. விரைவில் வழக்கிலிருந்து விடுபட்டு மீண்டும் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மக்கள்நலத் திட்டங்களை இன்னும் சிறப்பாகச் செய்துமுடிப்பார் என்றார்.
மாவட்ட மாணவரணித் தலைவர் சசிக்குமார், மாவட்ட விவசாய அணித் துணைத் தலைவர் முருகையாபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் ஜி. கற்பகம், மாவட்ட மகளிரணிப் பொருளாளர் முத்துலட்சுமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலர் கே. கண்ணன், துணைச் செயலர் பழனிமுத்து, வாசுதேவநல்லூர் நகரச் செயலர் எஸ். குமரேசன், மத்திய அண்ணா தொழிற்சங்கத் துணைத் தலைவர் முகமது உசேன், பேச்சாளர் கோவை புகாரி, ஒன்றியத் தலைவர் எஸ்.எஸ். நல்லையா, ஒன்றியப் பொருளாளர் வி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை(அக். 3)ராயகிரியிலும் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.