விருதுநகரில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட கேபிள் டிவி
Updated on
1 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்தும், விடுதலை செய்ய வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தின் சார்பில் கருப்புச் சட்டை அணிந்து சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜே.ஜீவா தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அசோக் முன்னிலை வகித்தார். தனியார் வசம் சிக்கியிருந்த கேபிள் டிவி ஆபரேட்டர்களை மீட்டு எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. தற்போது, சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் வழங்கிய அநீதி தீர்ப்பை கண்டித்தும், உடனே விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் மணிவண்ணன், சஞ்சீவிக்கனி, ரங்கசாமி, உக்கிரபாண்டியன்,  விருதுநகர் நகராட்சி தலைவர் மா.சாந்தி, நகராட்சி துணைத் தலைவர் மாரியப்பன்,  ஒன்றியக் குழுத்தலைவர் கி.கலாநிதி, துணைத் தலைவர் மற்றும் வட்டார ஊராட்சி உறுப்பினர் மூக்கையா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆபரேட்டர்கள் சங்கத்தைச் சேர்ந்த கதிர்வேல்முருகன் மற்றும் அழகர் ராமனுஜம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com