விருதுநகரில் மருத்துவக்கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாணவர் மன்ற பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்

விருதுநகர் மாவட்ட மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம் தனியார் அரங்கத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற பேரவையின் மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை
Updated on
1 min read

விருதுநகரில் அரசு அறிவித்துள்ள படி விரைவில் மருத்துவக் கல்லூரியை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் மன்ற பேரவைக் கூட்டத்தி்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்ட மாணவர் பெருமன்ற பேரவை கூட்டம் தனியார் அரங்கத்தில் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாணவர் பெருமன்ற பேரவையின் மாநில தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் வெங்கட்ராமன், முன்னாள் மக்களவை உறுப்பினர் அழகிரிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அனைவருக்கும் பட்டமேற்படிப்பு வரையில் இலவச கல்வி வழங்குவதுடன் அதற்கேற்ப வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விருதுநகரில் ஏற்கனவே அரசு அறிவித்துள்ளபடி மருத்துவக் கல்லூரியை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com