விகே.புரத்திலிருந்து தாமிரபரணி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரச்சார பயணம்

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தாமிரபரணி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரச்சாரப் பயணம் தொடங்கியது.
Updated on
1 min read

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் விக்கிரமசிங்கபுரத்திலிருந்து தாமிரபரணி விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பிரச்சாரப் பயணம் தொடங்கியது.

தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் சார்பில் அக்டோபர் 11 முதல் ஒரு வாரம் தாமிரபரணி பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை காலை விக்கிரமசிங்கபுரத்திலிருந்து திருநெல்வேலி வரையான ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் தொடங்கியது. பயணத்தை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விஷ்ணு தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலி வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி இயக்குனர் திலகவதி முன்னிலை வகித்தார். வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 30 பேர் தாமிரபரணி விழிப்புணர்வு குறித்த ஸ்கேட்டிங் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் அருள்தந்தை அந்தோணி குரூஸ், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஸ்கேட்டிங்க் மற்றும் யோகா பயிற்சியாளர் அழகேச ராஜா, நல்வினைச் செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர். விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் அருள்தந்தை ஜோசப் கென்னடி செய்திருந்தார்.

இந்தப் பிரச்சாரப் பயணம் விக்கிரமசிங்கபுரம் அமலி மேல்நிலைப் பள்ளி, கேம்ப்ரிட்ஜ் பள்ளி, கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா ஆகிய பள்ளிகளில் பிரச்சார பரப்புரை செய்து மாலை சேரன்மகாதேவியில் நிறைவடைகிறது. செவ்வாய் கிழமை காலை சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கி திருநெல்வேலி கைலாசபுரம் பாலர்வாடி பள்ளியில் நிறைவடைகிறது. இதையடுத்து சங்கர் நகர் ஸ்ரீ ஜெயேந்திரா கோல்டன் ஜூபிளி பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சைக்கிள் பேரணி திருநெல்வேலியில் தொடங்கி புன்னைக்காயலில் வியாழக்கிமை நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com