விருதுநகர் வட்டாரப் பகுதி ஆலைகளுக்கு அடிக்கடி வரும் அதிகாரிகள் தொல்லையால் இறுதிக் கட்டமாக பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தீபாவளி திருநாளுக்கு 6 நாள்களே உள்ளன. ஏற்கனவே பட்டாசு விற்பனையாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளோம். தற்போது, பட்டாசுகளை உற்பத்தி செய்து வழங்கும் வகையில் இறுதிக் கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்நிலையில் மீண்டும் ஆய்வு என்கிற பேரில் வருவாய் துறையினர், தீயணைப்பு துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வணிக வரித்துறை அதிகாரிகள் என குறிப்பிட்டு அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டியிருப்பதாக கூறி பணம் மட்டும் பட்டாசுகள் கேட்டு வருகின்றனர்.
இதுபோன்ற தொந்தரவினால் உரிமையாளர்கள் பட்டாசு ஆலைகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், ஆலை மேற்பார்வையாளர், மேலாளர் ஆகியோரின் மேற்பார்வையில் இறுதிக் கட்ட உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பாகவே தீபாவளி திருநாள் வந்து விட்டதால் விற்பனையாளர்களுக்கு உற்பத்தி செய்து வழங்க முடியாத நிலையிருக்கிறது. எனவே பல்வேறு காரணங்களை கருத்திற்கொண்டு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்! வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

"Get Out Of Here!" பாஜக பேரணியால் போக்குவரத்து நெரிசல்!அமைச்சரைத் திட்டிய பெண்ணால் பரபரப்பு!

ஒடிசாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!
எதிர்காலம் எழுகிறது! வைரலாகும் விஜய் பாதுகாவலர் பதிவு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

