தேவர் குருபூஜை: வாகனங்கள் குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேவர் குருபூஜை விழாவிற்கு சொந்த வாகனங்களில் செல்கிறார்கள் காவல் துறையால் அனுமதித்துள்ள குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சென்று திரும்ப வேண்டும் என
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்திலிருந்து தேவர் குருபூஜை விழாவிற்கு சொந்த வாகனங்களில் செல்கிறார்கள் காவல் துறையால் அனுமதித்துள்ள குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சென்று திரும்ப வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் தேவர் குருபூஜை விழா தொடர்பாக அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கூட்டத்தில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசுகையில், இம்மாவட்டத்திலிருந்து தேவர் குருபூஜை விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் வாகனங்களை பாதுகாப்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும். மேலும், சொந்த வாகனங்களில் செல்கிறவர்கள் குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் பெயர் விவரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து அனுமதி சீட்டுக்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதோடு, காவல் துறை அனுமதித்த வழித்தடங்கள் வழியாக மட்டுமே செல்ல வேண்டும். வாடகை வாகனங்கள், லாரி, டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் பட்டாசுகள், ஆயுதங்கள், மதுபானங்கள் ஆகியவை எடுத்துச் செல்லக் கூடாது. சாதி மத உணர்வுகளை தூண்டும் வகையில் தட்டிகளோ, கொடிகளோ வைக்க கூடாது.

எக்காரணம் கொண்டும் காவல் துறை குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் குருபூஜை விழாவிற்கு சென்று திரும்ப வேண்டும். மேலும், வழித்தடம் மாறிச் சென்றால் அந்த வாகனம் காவல் துறையால் பறிமுதல் செய்து அதில் பயணம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் வந்திதாபாண்டே, நேர்முக உதவியாளர் கொங்கன், துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் சமுதாய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com