வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

News image
Updated On :18 அக்டோபர் 2014, 6:40 am

ஷேக் அப்துல்காதர்

கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் கீழ் அணை-140, கடனாநதி அணை-5.

ராமநதி அணை-29, கருப்பாநதி அணை-21, குண்டாறு அணை-32, அடவிநயினார் அணை-15, வடக்குபச்சையாறு அணை-48.4, நம்பியாறு அணை-15, கொடுமுடியாறு அணை-50.

இதேபோல் நான்குனேரியில் 104 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 63 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 94 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 55 மி.மீ மழையும்,

ஸ்ரீவைகுண்டத்தில் 65 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 57 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 46.3 கன அடியும், மூலக்கரைப்பட்டியில் 33 மி.மீ மழையும், தென்காசியில் 42.2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 29 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அருவிகளில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாணதீர்த்த அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாணதீர்த்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் தடை விதிக்கப்பட்டு்ள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.