நெல்லை மாவட்டத்தில் பலத்த மழை: 5,000 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின; 100 ஏக்கரில் வாழைகள் சேதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் மழையால் நெல், வாழைப்பயிர்கள் சேதமடைந்தன. சுமார் 5,000 ஏக்கரில் அறுவடை செய்யும் பருவத்தில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மிதக்கின்றன. குலை வரும் பருவத்தில் சுமார் 100 ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்திருப்பதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.










