பழுதான நிலையில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய ஆட்சியர் உத்தரவு

மாவட்டத்தில் பழுதான நிலையில் காணப்படும் சங்கரப்பேரி மற்றும் கணேஷ்நகர் பகுதிகளில் உள்ள அரசு அலுவலர் வாடகை குடியிருப்புக் கட்டடங்களை உடனடி காலிசெய்ய வேண்டும் என ஆட்சியர் ம. ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Updated on
1 min read

 இந்த கட்டடங்கள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதாலும் அரசு ஊழியர்கள் குடியிருந்து வரும் குடியிருப்புகள் மிக சாதாரணமான இயற்கை இடர்பாடுகளை கூட தாங்கக் கூடிய நிலையில் இல்லை உள்ளதாலும் இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.

 இந்த குடியிருப்பினை காலி செய்யாமல் தொடர்ந்து குடியிருக்க நேரிட்டால் கட்டட பழுதுகளினால் ஏற்படக் கூடிய விபத்துகளுக்கும் இழப்புகளுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழக அரசும் எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்றும் ஆட்சியர் ம. ரவிக்குமார் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com