ஆம்பூர் அருகே சரக்கு ரயில் என்ஜீனில் கோளாறு :  பல ரயில்கள் தாமதம்

ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆம்பூருக்கும், விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் கன்னடிகுப்பம் பகுதியில் திடீரென நின்றது.  என்ஜீனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக
Updated on
1 min read

ஆம்பூர் அருகே சரக்கு ரயில் என்ஜீனில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ஜோலார்பேட்டை மார்க்கம் நோக்கி செல்லும் பல ரயில்கள் காலதாமதமாக சென்றனர்.

ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரயில் ஒன்று ஆம்பூருக்கும், விண்ணமங்கலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் கன்னடிகுப்பம் பகுதியில் திடீரென நின்றது.  என்ஜீனில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நின்றதாக கூறப்பட்டது.  காலை 8.30 மணிக்கு பழுதான ரயில் என்ஜீனை சரி செய்ய ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களிலிருந்து பணியாளர்கள் சென்றனர். 

முக்கியமான இருப்புப் பாதையிலேயே சரக்கு ரயில் என்ஜீன் பழுதாகி நின்றதால் அந்த மார்க்கத்தில் மற்ற ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.   சரக்கு ரயில் என்ஜீன் பழுது காரணமாக ஜோலார்பேட்டை நோக்கி சென்ற காகிநாடா எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை-கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், சென்னை-பெங்களூரு டபுள் டெக்கர் ரயில், சென்னை - பெங்களூரு பிருந்தவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆம்பூர், பச்சகுப்பம், மேல்பட்டி போன்ற ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.  அந்நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் பயணிகள் ரயிலை விட்டு இறங்க முடியாமல் ரயிலிலேயே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  காலை   சுமார் 11 மணிக்கு என்ஜீன் பழுது சரிசெய்யப்பட்டு அதன்பிறகு அந்த சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.  ரயில் என்ஜீன் பழுது காரணமாக பல பயணிகள் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அவை சுமார் 2 மணி நேரம் வரை காலதாமதமாக புறப்பட்டு சென்றன.  ரயில் காலதாமதம் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com