அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்திய பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட ரூ.4.29 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டட பணிகளுக்காக ரூ.4.29 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு

Updated On :21 அக்டோபர் 2014, 8:57 am

விருதுநகர் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டட பணிகளுக்காக ரூ.4.29 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இவைகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்க கூடுதல் வகுப்பறைகள், பிளஸ்2 அறிவியல் பாட பிரிவுகள் பயனடையும் வகையில் ஆய்வுக் கூடம், நூலகம், குடிநீர், சுகாதார வளாகம் மற்றும் சுற்றுச் சுவர் வளாகம் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக நபார்டு வங்கி மூலம் மொத்தம் ரூ.247.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், விருதுநகர் மாவட்டத்தில் 4 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டது. அதில், சாத்தூர் அருகே சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பளிக்கு ரூ.1.24 கோடியும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.25 கோடியும், மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.08 கோடியும், எஸ்.அம்மாபட்டி மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.72.92 லட்சம் என மொத்தம் 4.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் தொடங்கி நடைபெற இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.