ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கட்டையால் அடித்துக் கொலை

விருதுநகர் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளரை கட்டையால் அடித்து கொலை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

Updated On :24 அக்டோபர் 2014, 12:33 pm

விருதுநகர் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளரை கட்டையால் அடித்து கொலை செய்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியை வச்சக்காரப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

ஜார்க்ண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜூதீன் அலியா என்பவரின் மகன் அதாவூல் அபுல் அன்சாரி(29). இவர் இங்குள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அதேபோல், இதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்திலுள்ள நாகேன் மாவட்டம், காகி கிராமத்தைச் சேர்ந்த நல்லித்பருவி என்பவரின் மகன் முரளிபருவி(24) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், அதாவூல் அபுல்அன்சாரி அடிக்கடி முரளிபருவியை வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி கண்டிப்பாராம். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதையடுத்து வியாழக்கிழமை இரவு இருவரும் நன்றாக மதுக்குடித்துள்ளனர். அப்போது, இவர்களுக்குள் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த முரளிபருவி விறகு கட்டையால் அதாவூல் அபுல் அன்சாரியை சரமாரியாக தாக்கினாராம். இதில், படுகாயம் அடைந்த நிலையில் அங்கிருந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.