ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் அருகே மாணவர்களை தாக்கியதாக 3 பேர் மீது வழக்கு பதிவு 

விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On :24 அக்டோபர் 2014, 1:56 pm

விருதுநகர் அருகே கண்மாய் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர்களை தாக்கியது தொடர்பாக ஆமத்தூர் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் தனியார் பொறியியல் கல்லூரியில் வினோத்குமார், அருண்குமார் மற்றும் பாண்டீஸ்வரகுமார் ஆகியோர் படித்து வருகின்றனர். இவர்கள்  வெள்ளூர் ஊரணிக்கரை கண்மாய் அருகே வியாழக்கிழமை மாலையில் சைக்கிள்களை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த பெயர் தெரியாத அடையாளம் தெரிந்த 3 பேரும் மிதிவண்டிகளை கீழே தள்ளினார்களாம்.

இது குறித்து மாணவர்கள் கேட்டதற்கு 3 பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்களாம். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.