அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் பணிக்கு பரிந்துரை

அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

Updated On :24 அக்டோபர் 2014, 3:14 pm

அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தகுதியானவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட இருக்கிறது.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு விரைவுக் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள கனரக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய பணிகளுக்கு இரண்டையும் பதிவு செய்துள்ள அனைத்து பதிவுதாரர்களும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 

    இந்நிலையில் தங்கள் பரிந்துரை செய்யப்படும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகிற 28-ம் தேதி நேரில் வரவேண்டும். அப்போது, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டை, கனரக ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமங்கள், அனைத்து அசல் கல்விச் சான்றுகள், குடும்ப அட்டை ஆகியவைகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும், குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.