மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி சாவு: பிளஸ் 2 மாணவர் காயம்

நாமக்கல் துறையூர் சாலை அண்ணாநகரைச் சேர்ந்த சரவணனின் மகன் பாலமுருகன்(20) எலெக்ட்ரீசியன். இவரது உறவினர் அலங்காநத்தம் பிரிவைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் மணிகண்டன்(17) பிளஸ் 2 படித்து
Updated on
1 min read

நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் எலெக்ட்ரீசியன் உயிரிழந்தார். பிளஸ் 2 மாணவர் பலத்த காயமடைந்தார்.

நாமக்கல் துறையூர் சாலை அண்ணாநகரைச் சேர்ந்த சரவணனின் மகன் பாலமுருகன்(20) எலெக்ட்ரீசியன். இவரது உறவினர் அலங்காநத்தம் பிரிவைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் மணிகண்டன்(17) பிளஸ் 2 படித்து வருகிறார்.

இந்தநிலையில், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லில் நோக்கி துறையூர் சாலையில் வந்தனர். அப்போது எதிரே சென்ற கார் அந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனடியாக இருவரும் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார். மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com