விருதுநகர் அருகே வெவ்வேறு இடங்களில் உடல் நிலை சரியில்லாததாலும், தொழில் நஷ்டம் போன்ற காரணங்களால் 2 பேர் தற்கொலை கொண்டனர்.
விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர்(50). இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருந்தாராம். அதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மன நிம்மதியை இழந்தவர் பயிர்களுக்கு தெளிப்பதற்காக வாங்கி வைத்திருந்த விஷமருந்தை அருந்தினாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது மகன் ராம்ராஜ்(20) கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
விருதுநகர் அருகே கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் சூரியபிரகாஷ்(50). இவர் தனது மனைவி, மகன்களை 8 ஆண்டுகளாக பிரிந்து தனது சகோதரரி மற்றும் பாட்டியம்மாள் ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். இவர் வியாபாரத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் கடந்த சில நாள்களாகவே மன உளைச்சல் அடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தாரம். இதில், பலத்த காயம் அடைந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்று தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது மகன் சரவணக்குமார் விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.