விருதுநகரில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
விருதுநகரில் அனுமதியின்றி மதுப்பாட்டில்களை விற்ற 2 பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்கள் சாக்கு பையில் வைத்திருந்த 37 மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு தேவர் ஜயந்தி விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் மதுப்பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட பகுதிகளில் பஜார் காவல் நிலைய போலீஸார் ரோந்து சென்றனர்.
அப்போது, பால இறக்க பகுதியில் மது விற்றுக் கொண்டிருந்த 2 பேர் போலீஸாரை பார்த்ததும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தில் கட்டையாபுரத்தைச் சேர்ந்த மாரிக்கனி(31), வைரமணி(51) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும், சாக்கு பையில் வைத்திருந்த மதுப்பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
