டீசல் இல்லை: திருப்பரங்குன்றம் பணிமனையில் காலை நேரம் வரிசை கட்டிய பஸ்களால் கிராம மக்கள் அவதி

மதுரை திருமங்கலம் அரசுப் பேருந்து பணிமனையில் 105 பஸ்கள் இயங்குகின்றன. இவற்றின் மூலமே அருகில் உள்ள டி.கல்லுப்பட்டி, பேரையூர், சோழவந்தான் உள்ளிட்ட கிராமப் புற ஊர்களில் இருந்து நூற்றுக் கணக்கானோர் பள்ளிகள், அலுவலகங்களுக்கு மதுரை, திருமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் திருமங்கலம் அரசுப்பேருந்து பணிமனையில் டீசல் இல்லை என்பதால், இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் பணிமனையில் டீசல் பிடிக்க அரசு பஸ்கள் வரிசை கட்டி நின்றன. இதனால், பல கிராமப்புற பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த இடங்களுக்கு காலை நேரம் பஸ்கள் செல்லாததால், கிராமப் புற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர். அவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இனி இது போன்ற நிலை அரசுப் பஸ் பணிமனைகளில் ஏற்படாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com