விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு 211 பேர் வேட்பு மனுத்தாக்கல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 98 பதவிகளுக்கு நடத்தப்பட இருக்கிற இடைத்தேர்தலில் இதுவரையில் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் மற்றும்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 98 பதவிகளுக்கு நடத்தப்பட இருக்கிற இடைத்தேர்தலில் இதுவரையில் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 28ம் தேதி முதல் தொடங்கி, கடைசி நாளான வியாழக்கிழமை வரையில் நடைபெற்றது. இதில், காலியாக உள்ள 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வார்டு பதவிகளுக்கு 8 பேரும், 4 வட்டார ஊராட்சி ஊறுப்பினர் பதவிகளுக்கு 25 பேரும், 7 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 25 பேரும்,

73 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 126 பேரும், ராஜபாளையம், விருதுநகர் நகராட்சிகளில் காலியாக உள்ள 6 நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 27 பேரும் என மொத்தம் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது இன்று(வெள்ளிக்கிழமை) பரிசீலனை நடைபெற இருக்கிறது. செப்-8ம் தேதி வேட்பு மனுக்களை மாலை 3 மணி வரையில் திரும்பப் பெற்றுக்கொள்ளவும், அன்றே இறுதிப்பட்டியலும் வெளியிடப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு  செப்.18-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையடுத்து, செப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் கடந்த 30.6.2014 தேதி வரையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com