கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்குத் தொடர்பாக ஒரு பெண் உட்பட இருவரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர்.
திட்டக்குடியைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் கடந்த 8.6.2014 முதல் காணவில்லை என பெற்றோர்கள் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீஸார், இரு சிறுமிகளையும் ஆகஸ்டு 5ஆம் தேதி கண்டுபிடித்தனர்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் பாதிரியார் அருள்தாஸ்,பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.
இதேபோல் திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி,மேகலா,நெல்லிக்குப்பம் ராதா,கோலியனூர் கூட்டுரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் மாணவிகளை விடுதியில் தங்கவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் முதல்கட்டமாக பாதிரியார் அருள்தாஸ், தனலட்சுமி,கலா என்ற மேகலா, ஜெபினா, வடலூர் சதீஷ், தமிழ்செல்வி,சர்மிளா ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒரு கவிதா, மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா, கோலியனூர் பாத்திமா,இவரது கணவர் நம்மாழ்வார், சேலம் அன்பு, அமுதா, மற்றொரு அன்பு,பாலு என்ற பாலசுப்பிரமணியன், சதீஷ் மற்றும் ஓட்டுநர் ஸ்ரீதர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் பாலியல் குற்றம் செய்த திட்டக்குடியை சேர்ந்த மோகன்ராஜ், மதிவாணன், விக்னேஷ், ஆனந்தராஜ், ஆகியோரும் கைது செய்யப்பட்டு, இவர்களிடம் இருந்து ஒரு கார், 3 இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸôர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதாக விருத்தாசலத்தைச் சேர்ந்த கலா என்ற மேகலா மற்றும் வடலூரைச் சேர்ந்த சதீஷ் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை கைதுசெய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 21 பேரில் இருவர் மட்டும் முதற்கட்டமாக குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை

மொபைலில் சப்தமாக பேசினால் ரூ.500 அபராதம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

