எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மேயர் தேர்தலில் 7 பேர் மனுக்கள் தள்ளுபடி: நெல்லையில் வேட்பாளர்கள் போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலையொட்டி மனுத்தாக்கல் செய்திருந்த 7 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதைக் கண்டித்து வேட்பாளர்கள்

News image
Updated On :5 செப்டம்பர் 2014, 9:49 am

முத்துக்குமார்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலையொட்டி மனுத்தாக்கல் செய்திருந்த 7 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.இதைக் கண்டித்து வேட்பாளர்கள் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ளாட்சிப் பதவிகளுக்கு இம் மாதம் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கி கடந்த 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்கள் பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான அர.லட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகள் வேட்புமனு பரிசீலனையில் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் இ.புவனேஸ்வரி, அ.தி.மு.க. மாற்று வேட்பாளர் பியூலா சத்திய நேசி, பா.ஜ.க. வேட்பாளர் ஜி.பி.ஆர்.வெள்ளையம்மாள் ஆகியோரது மனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க. மாற்று வேட்பாளர் சந்திரா,  சுயேச்சை வேட்பாளர்கள் மேரி, செல்வி, இந்து மக்கள் கட்சி வேட்பாளர் உ.பாப்பா, இந்திய தேசிய லீக் கட்சி வேட்பாளர் செய்யதலிபாத்திமா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளர் மைதீன்பாத்திமாள், மாநகர பொதுநலக் குழு வேட்பாளர் அனிதா ஆகியோரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

வேட்பாளர்கள் போராட்டம்:வேட்புமனுக்கள் பரிசீலனையில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து வேட்பாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தை கண்டித்து முழக்கமிட்ட அவர்கள், வாக்காளர் பட்டியலையும் கிழிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் ரகுபதி ராஜா தலைமையிலான போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து சுயேச்சை வேட்பாளர் மேரி கூறியதாவது:மேலப்பாளையத்தில் உள்ள தெற்கு குருந்துடையார்புரத்தில் கடந்த 42 ஆண்டுகளாக ஒரே முகவரியில் வசி்த்து வருகிறேன். கடந்த 1995 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையின் கீழ் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வரை வாக்களித்துள்ளேன். மேயர் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விரும்பி மனுதாக்கல் செய்திருந்தேன். ஆனால், வாக்காளர் பட்டியலில் உள்ள எண் தவறாக உள்ளதாகக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளதாக கூறுகிறார்கள். இது ஏற்கும் வகையில் இல்லை. எனக்கு மட்டுமன்றி பல வேட்பாளர்களின் நிலையும் இதுதான். தேர்தல் ஆணையம் முறையாக இடைத்தேர்தலை நடத்தவில்லை என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம் என்றார்.

இதுகுறித்து தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள் ஜமால், அப்துல்ஜப்பார் ஆகியோர் கூறுகையில், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவது போல உள்ளது. அ.தி.மு.க. மட்டும்தான் போட்டியிட முடியும் என்பதை முதலிலேயே தெரிவித்திருந்தால் மற்றவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்க மாட்டார்கள். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் குறித்து நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் விளக்கம்: வேட்புமனுக்கள் நிராகரிப்பு குறித்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான அர.லட்சுமி கூறியதாவது:

உள்ளாட்சி இடைத்தேர்தல் என்பது உள்ளாட்சி வாக்காளர் பட்டியலின் கீழ் நடத்தப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியல் கடந்த 25-7-2014 இல் முதல் முறையாகவும், 4-8-2014 இல் இரண்டாம் கட்டமாகவும் மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியல் விவரங்களை அறிய வழிவகை செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள வரிசைஎண், பாகம் எண் உள்ளிட்டவற்றைதான் வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட வேண்டும் என்பது விதி. ஆனால், திருநெல்வேலி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பல வேட்பாளர்களின் பாகம் எண்கள் சரியாக இல்லை. சிலருக்கு முன்மொழிந்தவர்களின் பாகம் எண்கள் சரியாக இல்லை. மற்றபடி எவ்வித உள்நோக்கமும் கிடையாது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டலின்படி முறைப்படி தேர்தல் நடத்தப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.