திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லால் தாக்கி மனைவி கொலை

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(40). இவர் இப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி(35). இவர்களுக்கு 6
Updated on
1 min read

திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லால் மனைவியை தாக்கி கொலை செய்து விட்டு திங்கள்கிழமை தப்பியோடிய டிராக்டர் டிரைவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன்(40). இவர் இப்பகுதியில் டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நாகஜோதி(35). இவர்களுக்கு 6 மாத கைக்குழந்தை உள்பட 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குள் கடந்த சில நாள்களாகவே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாம். அதனால், அடிக்கடி கணவன்-மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவும் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் தூங்குவதற்குச் சென்றுள்ளனர். இதில் மனைவியின் மீது ஆத்திரம் குறையாத மாரீஸ்வரன் அதிகாலையி்ல் எழுந்துள்ளார். பின் வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லால் மனைவியின் தலையில் தாக்கி கொலை செய்திருக்கிறார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் விழித்து எழுந்தனர். அதற்குள் மாரீஸ்வரன் தப்பியோடினார். இது குறித்து கிராம பொதுமக்கள் எ.முக்குளம் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் நாகஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாரீஸ்வரன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com