விபத்தில் காயமடைந்த கூலித்தொழிலாளிக்கு நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி நாமக்கல் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
நாமக்கல் போதுப்ப்டி அருகே நல்லிக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த செல்லபப்பகவுண்டரின் மகன் நல்லுசாமி(26) கூலித்தொழிலாளி. இவர் 2012 ஜூன் 29-ம் தேதி கோவையில் இருந்து ஈரோடு நோக்கி ஈரோடு கோட்ட அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த சேலம் கோட்ட அரசு பேருந்து சின்னய்யம்பாளையம் என்ற பகுதியில் முன்னால் சென்ற ஈரோடு கோட்ட பேருந்து மீது மோதியது. இதில் நல்லுசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில மாதங்கள் சிகிóச்சைக்கு பிறகு அவர், நஷ்டஈடு கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.
இதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நல்லுசாமிக்கு சேலம் கோட்ட அரசு பேருந்து நிர்வாகம் ரூ.1,30,700 நஷ்டஈடு வழங்கிட வேண்டும் எனறு 2013 அக்டோபர் 30-ம் தேதி தீóர்ப்பளித்தது. உரிய காலத்தில் அந்த தொகையை அரசு பேருந்து நிர்வாகம் செலுத்தாததை அடுத்து நல்லுசாமி அதே நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுத்தாக்கல் செய்தார். இதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், சேலம் கோட்டத்துக்கு சொந்தமான அரசு பேருந்தை ஜப்தி செய்து பாதிக்கப்பட்ட நல்லுசாமிக்கு வட்டியுடன் ரூ.1.61 லட்சம் தொகை வழங்கிட ஆகஸ்ட் 25-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில், கரூரில் இருந்து சேலம் செல்ல நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் கோட்ட அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால், நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.