ஓட்டுநரை வழிமறித்து வேனை கடத்திய 4 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த ராஜாமணியின் மகன் பாபு(45). இவர் திங்கள்கிழமை இரவு தனக்கு சொந்தமான வேனில்(மினி டாடா ஏஜ்)  மதுரைக்கு சரக்கு
Updated on
1 min read

விருதுநகர் அருகே ஓட்டுநரை வழிமறித்து வேனை கடத்திச் சென்றதாக 4 பேரை பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த ராஜாமணியின் மகன் பாபு(45). இவர் திங்கள்கிழமை இரவு தனக்கு சொந்தமான வேனில்(மினி டாடா ஏஜ்)  மதுரைக்கு சரக்கு ஏற்றி சென்று இறக்கி விட்டு, திரும்பி கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தாராம். அப்போது, மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ்(28), சாலமன்ராஜா(30), விஜயராஜா(35), பார்த்திபன்(30) ஆகியோர் கொண்ட கும்பல், விருதுநகர் சத்திரரெட்டியாபட்டி அருகே வந்து கொண்டிருக்கும் போது நடு ரோட்டில் வழிமறித்துள்ளனர்.

உடனே உதவி கேட்கிறார்கள் என நினைத்து பாபு வேனை நிறுத்தியுள்ளார். அப்போது, ரூ.1000 பணம் இருக்கா எனக் கேட்டு மிரட்டினார்களாம். அதற்கு பணம் இல்லையென மறுத்தாராம். உடனே பையில் பணமில்லாத உனக்கு எதுக்கு வேன் எனக் கூறி இறக்கி விட்டு கடத்திச் சென்றார்களாம். உடனே இது தொடர்பாக பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் பாபு புகார் செய்தார். அதன் அடிப்படையில் வாகன தணிக்கை செய்து மேற்குறிப்பிட்ட 4 பேரையும் கைது செய்து, வேனையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com